×
Saravana Stores

வங்கதேச பெண்களுக்கு எதிராக இந்தியா ஹாட்ரிக் வெற்றி

சிலெட்: வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 ஆட்டங்களில் வென்ற இந்தியா தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் 3வது ஆட்டம் சிலெட்டில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய வங்கதேச பெண்கள் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 117ரன் எடுத்தது.

அணியில் அதிகபட்சமாக திலரா அக்தர் 39, நிகர் சுல்தானா 28 ரன் எடுத்தனர். இந்திய தரப்பில் ராதா யாதவ் 2விக்கெட் எடுத்தார்.  தொடர்ந்து விளையாடிய இந்தியாவின் மந்தானா, ஷபாலி இருவரும் முதல் விக்கெட்டுக்கு 91ரன் சேர்ந்தனர். ஷபாலி 51ரன் எடுத்திருந்த போது ரிட்டு மோனி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் வெற்றிக்கான 26ரன் எடுப்பதற்குள் மந்தானா 47, ஹேமலதா தயாளன் 9 ரன்னில் ஆட்டமிழந்தனர். கூடவே 38பந்துகளும் தேவைப்பட்டன.

நீண்ட ஆட்டத்தின் 18.3வது ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 121 ரன் என்ற இலக்கை தாண்டிய இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கேப்டன் ஹர்மன் பிரீத் 6, விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 5 ரன்னுடன் கடைசி வரை களத்தில் இருந்தனர். இந்த ஹாட்ரிக் வெற்றியுடன் 3-0 என்ற கணக்கில் தொடரில் இந்தியா முன்னிலையையும் உறுதி செய்தது. இந்த 2 அணிகளுக்கு இடையிலான 4வது டி20 ஆட்டம் மே 6ம் தேதி நடைபெறும்.

The post வங்கதேச பெண்களுக்கு எதிராக இந்தியா ஹாட்ரிக் வெற்றி appeared first on Dinakaran.

Tags : India ,Bangladesh ,Sylhet ,women's team ,T20I ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்கத்தில் அமைதியை நிலைநாட்ட...