×

அதிகம் எல்லாம் அதிகம் (சென்னை-பஞ்சாப் ஆட்டம் வரை)

* அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் சென்னை கேப்டன் ருதுராஜ்(509ரன்) முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்ட கோஹ்லி(500ரன், பெங்களூர்), சாய் சுதர்சன்(418, குஜராத்), ராகுல்(406, லக்னோ), ரிஷப்(398, டெல்லி) ஆகியோர் அடுத்த 4 இடங்களில் உள்ளனர். இவர்களில் கோஹ்லி, ரிஷப் மட்டுமே உலக கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளனர்.

* பும்ரா(மும்பை), முஸ்டாபிசூர்(சென்னை) ஹர்ஷல்(பஞ்சாப்) ஆகியோர் தலா 14 விக்கெட்களுடன் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ளனர். கூடவே தலா 13 விக்கெட்களுடன் பதிராஜனா(சென்னை), சாஹல்(ராஜஸ்தான்) நடராஜன்(ஐதராபாத்) ஆகியோர் அடுத்த 3 இடங்களை பிடித்துள்ளனர்.

* அதிகம் சிக்சர்கள் விளாசியர்கள் பட்டியலில் முதல் 2 இடங்களில் ஐதராபாத் வீரர்கள் கிளாஸன்(28சிக்சர்), அபிஷேக்(27) ஆகியோர் கைப்பற்றி உள்ளனர்.

* அதிக முறை பந்தை பவுண்டரிக்கு விரட்டியவர்கள் வரிசையில் ருதுராஜ்(53பவுணட்ரி, சென்னை), கோஹ்லி(46, பெங்களூர்), சால்ட்(44, கொல்கத்தா), சாய் சுதர்சன்(43, ராஜஸ்தான்) ஆகியோர் முதல் 4 இடங்களில் இருக்கின்றனர்.

* இதுவரை 49 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன நிலையில் 10சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. பட்லர்(ராஜஸ்தான்) 2சதங்களும், கோஹ்லி, ஜாக்ஸ்(பெங்களூர்), நரைன்(கொல்கத்தா), ரோகித்(மும்பை), டிராவிஸ்(ஐதராபாத்), ஜெய்ஸ்வால்(ராஜஸ்தான்), மார்கஸ் ஸ்டோய்னிஸ்(லக்னோ), ருதுராஜ்(சென்னை),(ெபங்களூர்)ஆகியோர் தலா ஒரு சதமும் வெளுத்துள்ளனர்.

* சால்ட்(கொல்கத்தா), சஞ்சு (ராஜஸ்தான்), ருதுராஜ்(சென்னை), கோஹ்லி(பெங்களூர்), ரிஷப்(டெல்லி) ஆகியோர் மட்டும் அதிகபட்சமாக தலா 4 அரைசதங்கள் விளாசி இருக்கின்றனர். இவர்களை தவிர 9 வீரர்கள் தலா 3 அரை சதங்களும், 10வீரர்கள் தலா 2 அரை சதங்களும், 25 வீரர்கள் தலா ஒரு அரைசதம் அடித்துள்ளனர்.

* டெல்லி வீரர் ஜாக் ஃபிரசெர்(டெல்லி) தலா 2முறை 15பந்துகளிலும் அரைசதம் விளாசி முதல் 2 இடங்களில் உள்ளார். கூடவே தலா 16 பந்துகளில் அரைசதங்கள் வெளுத்த ஐதராபாத் வீரர்கள் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் அடுத்த 2 இடங்களில் உள்ளனர்.

The post அதிகம் எல்லாம் அதிகம் (சென்னை-பஞ்சாப் ஆட்டம் வரை) appeared first on Dinakaran.

Tags : Chennai-Punjab ,Chennai ,Ruduraj ,Kohli ,Bangalore ,Sai Sudarsan ,Gujarat ,Rahul ,Lucknow ,Rishabh ,Delhi ,Dinakaran ,
× RELATED சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் மோதல்: நெருக்கடியில் ருதுராஜ் & கோ