×

தீ தடுப்பு தொழிலக பாதுகாப்பு குழு கூட்டம்


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான தீ தடுப்பு மற்றும் தொழிலக பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாவட்டத்தில் வெளி விபத்துக்கள் ஏதும் ஏற்படா வண்ணம் கண்காணிக்க வேண்டும் மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகள் மற்றும் அனைத்து பட்டாசு உற்பத்தி செயல்படும் மையங்களை உடனடியாக கூட்டாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் ஆவடி துணை காவல் கண்காணிப்பாளர் ஐமன் ஜமால், சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க துணை இயக்குநர் ஹேமலதா, உதவி இயக்குனர் ரமேஷ், சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மீரா, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணி, புவியியல் மற்றும் சுரங்கம் உதவி புவியியலாளர் ஜெகதீசன், சென்னை மாவட்ட உதவி திட்ட அலுவலர் அத்திப்பட்டு – 2 செல்வராஜ், மாவட்ட கலெக்டர் அலுவலக குற்றவியல் மேலாளர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தீ தடுப்பு தொழிலக பாதுகாப்பு குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Fire Prevention Industrial Safety Committee ,Tiruvallur ,prevention ,industrial safety ,Thiruvallur ,T. Prabhu Shankar ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை