×

லாரி மோதி முதியவர் பலி

புழல்: புழல் அடுத்த விநாயகபுரம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (83) இவர் நேற்று காலை, புழலில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக சென்றார். புழல் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, மாதவரத்தில் இருந்து செங்குன்றம் நோக்கிச் சென்ற மினி லாரி, இவர் மீது மோதியது. இதில், பெருமாள் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்த மாதவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய ஆவடி அடுத்த வீராபுரத்தைச் சேர்ந்த மினி லாரி டிரைவர் மணியை (61) கைது செய்தனர்.

The post லாரி மோதி முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Perumal ,Vinayakapuram Vinayagar Koil Street ,Chennai-Kolkata National Highway ,Madhavaram ,
× RELATED புழல் – தாம்பரம் பைபாஸ் சாலையில்...