- ஸ்ரீவில்லிபுத்தூர்
- -மேகமாலை புலி ரிசர்வ்
- வில்லிபுத்தூர்
- மேகமலை புலிகள் காப்பகம்
- மேற்குத்தொடர்ச்சி
- விருதுநகர் மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கேரளா
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் உள்ள வில்லிபுத்தூர் வனப்பகுதிகளில் உயரமான மலைப்பகுதிகளில் வரையாடுகள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில், வரையாடுகள் ஒருங்கிணைப்பு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தமிழகம் மற்றும் கேரள வனப்பகுதிகளில் ஒருங்கிணைந்த வரையாடுகள் கணக்கெடுப்பு 3 நாட்கள் நடைபெற்றது.
இப்பணி நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. இதன்படி, வில்லிபுத்தூர் வனப்பகுதியில் 30 இடங்களில் வரையாடுகள் கணக்கெடுப்பில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் பைனாக்குலர் மூலம் வரையாடுகளை கண்காணித்து கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வரையாடுகளை பொறுத்தவரை மலைகளின் உச்சிப்பகுதியில் தான் அதிகளவில் காணப்படும். இது வரையாடுகளுக்கு பாதுகாப்பாகும். அடிக்கடி நடக்கும் வனத்துறை சோதனைகள், வேட்டை தடுப்பு செயல்களால், வரையாடுகள் வேட்டை தடுக்கப்பட்டுள்ளது. இதனால், வில்லிபுத்தூர் வனப்பகுதியில் வரையாடுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இருப்பினும் வரையாடுகளின் எண்ணிக்கை குறித்த முழுவிபரம் இன்னும் சில தினங்களில் தெரிய வரும்’ என்றனர்.
The post ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: வனத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.