சென்னை : நடப்பாண்டில் இதுவரை தமிழகத்தில் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் தீவிரமான வெப்ப அலைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கரூர், ஈரோடு. நாமக்கல்லில் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, சேலம், திருச்சி, திருப்பூர் மற்றும் கோவையில் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நீலகிரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே வெப்ப அலையின் தாக்கம் குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “தமிழ்நாட்டில் மே முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து இருக்கும். கர்நாடகம், ஆந்திராவில் இருந்து வெப்பக்காற்று வருகிறது. ஆகவே தமிழக வடமேற்கு மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கக்கூடும். தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பு வெப்பநிலையை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாகவே காணப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post தமிழகத்தில் தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? :பாலச்சந்திரன் சொல்வது என்ன ? appeared first on Dinakaran.