இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களது சிம்கார்டுகளை முடக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய வருவாய் வாரியம் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘‘2023ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு தவறிய 506671 நபர்களின் சிம்கார்டுகள் முடக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் பாகிஸ்தான் தகவல் தொடர்பு ஆணையம் மற்றும் அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும் சிம்கார்டுகளை முடக்க கோரும் உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
The post பாக்.கில் வரி ஏய்ப்பு செய்த 5லட்சம் பேரின் சிம்கார்டு முடக்கம் appeared first on Dinakaran.