- ஜி.கே.
- வாசன்
- சென்னை
- தினம்
- ஆழ்வார்பேட்டை
- Tamaga
- Tamaka
- ஜனாதிபதி
- ஜி.கே.வாசன்
- கர்நாடக
- முதல் அமைச்சர்
- துணை
- தின மலர்
சென்னை: தமாகா சார்பில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று மே தினம் கொண்டாடப்பட்டது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தொழிற்சங்கத்தை சேர்ந்த பெண்களுக்கு உடைகளை வழங்கினார். பின்னர் ஜி.கே.வாசன் கூறுகையில், தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக முதல்வரும், துணை முதல்வரும் அடிக்கடி கூறுவது விவசாயிகள் மத்தியில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. தமாகா சார்பில் நேற்று திறக்கப்பட்ட தண்ணீர் பந்தலை மாநகராட்சி அகற்றி உள்ளது. இன்று மீண்டும் அதே இடத்தில் தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கத்தால் சிரமப்படும் மக்களுக்காக எந்த கட்சி வேண்டுமானாலும் தண்ணீர் பந்தல் வைக்கலாம். வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பழுது ஏற்பட்டால், அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். தேர்தல் அதிகாரிகள் முறையாக அவற்றை பாதுகாக்க வேண்டும் என்றார்.
The post வாக்குப்பதிவு இயந்திரங்களை முறையாக பாதுகாக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.