- மோடி அரசு
- திருமாவளவன்
- சென்னை
- தொழிலாளர் தினம்
- விடுதலை தலைவர்
- புலிகள்
- தமிழ் ஈழம்
- தொழிலாளர் நினை
- மே தின பூங்கா
- சிந்தாதிரிப்பேட்டை
- இந்தியா
சென்னை : தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள தொழிலாளர் நினைவுச் சின்னத்திற்கு நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: இந்தியாவில் 8 மணி நேரம் வேலையை உறுதி செய்தது அப்போதைய சட்டத்துறை அமைச்சராக இருந்த அம்பேத்கர் என்பதை நினைவு கூருவோம். மோடி தலைமையிலான தொழிலாளர்கள் விரோத பாஜக அரசுக்கு எதிராக 10 ஆண்டுகளாக தொழிலாளர்கள் போராடி வருகின்றனர், 44 தொழிலாளர் சட்டங்களையும் மாற்றி 4 சட்டங்களாக தொகுத்துள்ளது. அந்த சட்டங்கள் தொழிலாளர்கள் உரிமைகளை பாதிக்கப்படுவதாக உள்ளது.
3வது கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் இந்திய தொழிலாளர்கள் வர்க்கத்திற்கு விசிக விடுக்கும் வேண்டுகோள், தொழிலாளர்கள் விரோத மோடி அரசை தூக்கி எறிய இந்த நாளில் உறுதி ஏற்போம். தொழிலாளர்கள் நலன்கள் காக்கப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். வாக்கு பதிவு விவரம் வெளியிடுவதில் தொடர்ந்து தேர்தல் ஆணையம் குளறுபடி செய்து வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி செய்ய முடியும் என்பதால் இது வேண்டாம் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் செவி சாய்க்கவில்லை. எனவே எந்த தில்லுமுல்லும் குளறுபடியும் நடைபெறவில்லை என தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும்.
The post தொழிலாளர் விரோத மோடி அரசை தூக்கி எறிய உறுதி ஏற்போம்: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.