சென்னை,மே 2: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமான பிரமலைக் கள்ளர் வகுப்பைச் சார்ந்த மக்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், இப்பகுதி மக்கள் அதிகமாக வசிக்கும் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 298 பள்ளிகள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்கி வருகின்றன. இங்கு 27,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். இது கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்தப் பள்ளிகள் துவங்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் இப்பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையோடு இணைப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இது கடும் கண்டனத்திற்குரியது. எனவே அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேசி, கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க கேட்டுக் கொள்கிறேன்.
The post கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மிக பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.