×

ஒரே நாளில் 130 ரவுடிகள் கைது: ஆவடி காவல் ஆணையர் சங்கர் தகவல்

ஆவடி: ஆவடி காவல் ஆணையர் சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரவுடிகள் வேட்டை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கொலை, கொள்ளை, போதை பொருள் மற்றும் கொடூர குற்ற வழக்குகளில் தொடர்புடைய 130 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

செங்குன்றம் காவல் மாவட்டத்தில் 20 கொலை குற்றவாளிகள் மற்றும் ஆவடி காவல் மாவட்டத்தில் 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோல் பிடியாணை பெற்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த ஒருவர், பழைய குற்றவாளிகள் மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 104 உட்பட ஒரே நாளில் 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகளின் வேட்டை தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

The post ஒரே நாளில் 130 ரவுடிகள் கைது: ஆவடி காவல் ஆணையர் சங்கர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Avadi Police Commissioner ,Shankar ,Aavadi ,Police Commissioner ,Aavadi Police Commissionerate ,Dinakaran ,
× RELATED சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கை...