×

மோடி இன்னும் 5 ஆண்டுகள் ஆட்சி செய்தால் நாடே அழிந்துவிடும்: மல்லிகார்ஜூன கார்கே காட்டம்

சம்பா: மோடி இன்னும் 5 ஆண்டுகள் ஆட்சி செய்தால் நாடே அழிந்துவிடும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். சட்டீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் நடந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், ‘400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பாஜக கூறுவது, ஏழைகளின் நலனுக்காக அல்ல; மாறாக அவர்களின் உரிமைகளைப் பறிப்பதற்காகத்தான். எங்களது கூட்டணி பெரும்பான்மை பலத்தை நோக்கிச் செல்கிறோம், அதனால்தான் அவர் (மோடி) இப்போது பெண்களின் தாலி, முஸ்லிம்களை பற்றிப் பேசுகிறார். அவர் (மோடி) உங்கள் செல்வத்தை திருடி அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு கொடுப்போம் என்று கூறுகிறார். ஏழைகளிடம் பணம் இல்லாததால் அதிகமாக குழந்தைகள் உள்ளனர்.

ஆனால் நீங்கள் (மோடி) முஸ்லிம்களைப் பற்றி மட்டும் ஏன் பேசுகிறீர்கள்? முஸ்லிம்களும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம். நாங்கள் 55 ஆண்டுகளாக ஆட்சி செய்தோம். யாருடைய தாலியையும் பறிக்கவில்லை. முஸ்லிம்கள் வசிக்காத இடத்தில் கூட, இந்து – முஸ்லிம் பிரச்னைகள் பற்றி மோடி பேசுகிறார். மோடி இன்னும் 5 ஆண்டுகள் ஆட்சி செய்தால் நாடே அழிந்துவிடும். மோடி அவர்களே… நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்றால், அது காங்கிரசால் தான்; நீங்கள் பிரதமரானதற்கு காரணம் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றிய காங்கிரசால்தான்’ என்றார்.

The post மோடி இன்னும் 5 ஆண்டுகள் ஆட்சி செய்தால் நாடே அழிந்துவிடும்: மல்லிகார்ஜூன கார்கே காட்டம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Mallikarjuna Karke Kattam ,Champa ,Congress ,president ,Mallikarjuna Kharge ,Janjgir-Shamba district ,Chhattisgarh ,Mallikarjuna Kharke Kattam ,
× RELATED பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினத்தை ஒட்டி பிரதமர் மோடி புகழாரம்!