×

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் நடராஜனை சேர்க்க வேண்டும்: நடிகர் சரத்குமார்

சென்னை: டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் நடராஜனை சேர்க்க வேண்டும் என நடிகர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். நடராஜன் சிறந்த வேகப்பந்து வீச்சாளர், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. வாய்ப்பு இருப்பின் அவரை தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் மறுபரிசீலனை செய்யலாம் என நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

The post டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் நடராஜனை சேர்க்க வேண்டும்: நடிகர் சரத்குமார் appeared first on Dinakaran.

Tags : Natarajan ,India ,T20 World Cup ,Sarathkumar ,Chennai ,T20 World Cup cricket ,Dinakaran ,
× RELATED டி-20 உலக கோப்பை கிரிக்கெட்டில்...