×
Saravana Stores

செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில் தண்ணீர் தேடி கூட்டமாக ஊருக்குள் வரும் யானைகள்

*பொதுமக்கள் அச்சம்

செங்கோட்டை : செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில் தண்ணீர் மற்றும் இரை தேடி ஊருக்குள் கூட்டமாக உலா வரும் யானைகளால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கின்றனர்.தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின் தாக்கம் துவங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு வனப்பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் அங்குள்ள நீரோடைகள் தண்ணீரின்றி வறண்ட நிலையில் உள்ளன. இதனால் வனத்திலிருந்து யானைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் தண்ணீர் மற்றும் இரை தேடியும், கோடை வெயிலின் வெப்பத்தின் தாக்கத்தை தாங்க முடியாமலும் வனப்பகுதியில் இருந்து ஊர் பகுதிக்குள் கூட்டமாக உலா வருவது வாடிக்கையாக மாறி விட்டது.

அந்த வகையில், மேக்கரை பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம் ஒன்று அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி பயிர்களை உண்டு வரும் நிலையில், அதனை விரட்ட வனத்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும், மேலும், பகல் நேரங்களில் உலா வரும் யானை கூட்டங்களால் வெளியே வர முடியாமல் அச்சத்தில் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

The post செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில் தண்ணீர் தேடி கூட்டமாக ஊருக்குள் வரும் யானைகள் appeared first on Dinakaran.

Tags : Makerai ,Red Fort ,Sengottai ,Tenkasi district ,Agni Nakshatra ,Dinakaran ,
× RELATED செங்கோட்டை அருகே வடகரையில்...