- லக்னோ
- மும்பை இந்தியர்கள்
- லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ்
- ஐபிஎல் லீக்
- வாஜ்பாய் ஸ்டேடியம்
- இஷான்
- ரோஹித்
- மும்பை
- தின மலர்
லக்னோ: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்துவீசியது. இஷான், ரோகித் இணைந்து மும்பை இன்னிங்சை தொடங்கினர். ரோகித் 4, சூரியகுமார் 10, திலக் வர்மா 7 ரன்னில் வெளியேறினர். மும்பை கேப்டன் ஹர்திக் சந்தித்த முதல் பந்திலேயே முட்டை போட, அந்த அணி 5.2 ஓவரில் 27 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், இஷான் – நெஹல் வதேரா ஜோடி பொறுப்புடன் விளையாடி 53 ரன் சேர்த்தது. இஷான் 32 ரன் (36 பந்து, 3 பவுண்டரி), நெஹல் வதேரா 46 ரன் (41 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), முகமது நபி 1 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.
மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்தது. டிம் டேவிட் 35 ரன் (18 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), கோட்ஸீ 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். லக்னோ பந்துவீச்சில் மோஷின் 2, ஸ்டாய்னிஸ், நவீன், மயங்க், பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய லக்னோ 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஸ்டாய்னிஸ் அதிகபட்சமாக 62 ரன், ராகுல் 28 ரன், எடுத்தனர். மும்பை பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட் வீழ்த்தினார்.
The post மும்பை இந்தியன்சை வீழ்த்தியது லக்னோ appeared first on Dinakaran.