×

மோசமான வானிலை : அனந்தநாக் – ரஜோரி தேர்தல் தேதி மாற்றம்


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் – ரஜோரி தொகுதியில் வரும் 7ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மோசமான வானிலை காரணமாக அந்த தொகுதி தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என அங்குள்ள சில பிராந்திய கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தன. ஆனால் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் தேர்தல் தேதியை மாற்ற வேண்டாம் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக அனந்த்நாக் – ரஜோரி தொகுதிக்கான தேர்தலை 6ம் கட்டமான மே 25ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்தது .

The post மோசமான வானிலை : அனந்தநாக் – ரஜோரி தேர்தல் தேதி மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Anantnag ,Rajouri ,Srinagar ,Anantnag-Rajori ,Jammu and Kashmir ,Election Commission ,Anantnag – Rajouri ,Dinakaran ,
× RELATED டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் விமான...