- பப்பர்
- குர்கான்
- காங்கிரஸ்
- புது தில்லி
- மக்களவைத் தேர்தல்
- ராஜ் பப்பர்
- அரியானா
- ஆனந்த் சர்மா
- காங்க்ரா
- ஹிமாச்சல
- சத்பால் ரீஸ்டா
- ஹமீர்பூர்
- மகாராஷ்டிரா
புதுடெல்லி: மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இதில் 4 வேட்பாளர்கள் இடம் பெற்றனர். அரியானா மாநிலம் குர்கானில் நடிகர் ராஜ் பப்பர், இமாச்சல் மாநிலம் கங்ராவில் ஆனந்த் சர்மா, ஹமிர்பூர் தொகுதியில் சத்பால் ரெய்ஸ்டா, மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வடக்கு தொகுதியில் பூஷன் பட்டேல் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் உபி மாநிலம் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ரேபரேலியில் பிரியங்காவும், அமேதியில் ராகுல் காந்தியும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இறுதி அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தெரிகிறது.
The post குர்கானில் நடிகர் ராஜ் பப்பர் போட்டி: காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.