×

சட்டீஸ்கரில் 10 நக்சல்கள் சுட்டுக் கொலை


நாராயண்பூர்: சட்டீஸ்கரில் 3 பெண் நக்சல்கள் உட்பட மொத்தம் 10 நக்சல்கள் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். சட்டீஸ்கரில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த 16ம் தேதி கான்கெர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 29 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில் நாராயண்பூர் மற்றும் கான்கெர் மாவட்டங்களில், மாவட்ட ரிசர்வ் படையினர் மற்றும் சிறப்பு படையினர் இணைந்து தீவிர நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்ஹத்மேட் பகுதியில் டெக்மேடா மற்றும் காகுர் கிராமங்களுக்கு இடையே உள்ள காட்டுப்பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது நக்சல்கள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

இதனை தொடர்ந்து வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதில்3 பெண் நக்சல்கள் உட்பட மொத்தம்10 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டது. மேலும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்தில் இருந்து ஏகே 47 ரைபிள், ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கொல்லப்பட்ட நக்சல்கள் யார் என்பது இன்னும்அடையாளம் காணப்படவில்லை. 15 நாட்களுக்குள் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த இரண்டாவது வெற்றியாகும். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை மொத்தம் 91 நக்சல்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

The post சட்டீஸ்கரில் 10 நக்சல்கள் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Tags : Naxals ,Chhattisgarh ,Narayanpur ,Kanker ,Dinakaran ,
× RELATED என்கவுன்டரில் 7 நக்சல்கள் பலி