×

சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: அமைச்சர் சாமி தரிசனம்

பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் கோயிலில், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே சிறுவாபுரியில் பிரசித்திபெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமையான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதலே திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். பொது தரிசனம், கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தனது குடும்பத்துடன் சிறுவாபுரி கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். அப்போது சென்னை, வில்லிவாக்கத்தை சேர்ந்த பெண் பக்தர் சித்ரா (43) என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கி கோயில் வளாகத்தில் விழுந்து படுகாயமடைந்தார். அவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் பக்தர்களுக்கிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: அமைச்சர் சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Siruvapuri Murugan Temple ,Minister Sami darshanam ,Periyapalayam ,Minister ,PK Sekarbabu ,Sami ,Balasubramania Swamy temple ,Siruvapuri ,Tiruvallur district ,
× RELATED ஆடிமாத செவ்வாய்கிழமையையொட்டி...