×

பட்லர் தலைமையில் பலமான இங்கிலாந்து

உலக கோப்பை டி20 தொடரில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி மீண்டும் ஜோஸ் பட்லர் தலைமையில் களமிறங்க உள்ளது. 2022 தொடரில் விளையாடிய 9 வீரர்கள் தங்கள் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். அதிரடி வீரர் பென் ஸ்டோக்ஸ், சொந்த காரணங்களுக்காக தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என ஏற்கனவே அறிவித்து விலகிவிட்டது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து வீரர்கள், ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் விளையாட மாட்டார்கள் என அநாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால், லீக் சுற்றுடன் அவர்கள் நாடு திரும்ப உள்ளனர்.

இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஃபில் சால்ட், வில் ஜாக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, பென் டக்கெட், ஹாரி புரூக், லயம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி (துணை கேப்டன்), சாம் கரன், கிறிஸ் ஜார்டன், டாம் ஹார்ட்லி, அடில் ரஷித், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட், ரீஸ் டாப்லி.

The post பட்லர் தலைமையில் பலமான இங்கிலாந்து appeared first on Dinakaran.

Tags : England ,Buttler ,World Cup T20 ,Jos Buttler ,Ben Stokes ,Dinakaran ,
× RELATED இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்: நியூயார்க்கில் இரவு 8.00 மணிக்கு தொடக்கம்