×
Saravana Stores

உபெர் கோப்பை பேட்மின்டன்: கால் இறுதியில் இந்தியா


செங்டு: உபெர் கோப்பைக்கான மகளிர் குழு பேட்மின்டன் போட்டி சீனாவின் செங்டு நகரில் நடக்கிறது. ஏ பிரிவில் இந்தியா முதல் 2 ஆட்டங்களில் கனடா, சிங்கப்பூர் அணிகளை தலா 4-1 என்ற செட்களில் வென்றது. பி.வி.சிந்து உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் இல்லாத நிலையில், இளம் வீராங்கனைகள் இந்த சாதனையை படைத்திருந்தனர். கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா நேற்று பலம் வாய்ந்த சீன அணியுடன் மோதியது. அதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய சீன வீராங்கனைகள் 3 ஒற்றையர், 2 இரட்டையர் ஆட்டங்களையும் வென்று 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. சீன அணி ஏற்கனவே கனடா, சிங்கப்பூர் அணிகளையும் தலா 5-0 என்ற கணக்கில் வென்றிருந்தது. அதனால் ஏ பிரிவில் முதல் இடத்தை சீனாவும், 2வது இடத்தை இந்தியாவும் பெற்றதுடன் காலிறுதிக்கும் முன்னேறின.

காலிறுதி ஆட்டம் நாளை நடைபெறும்
தாமஸ் கோப்பைக்கான ஆண்கள் குழு பேட்மின்டன் சி பிரிவில் இடம் பெற்ற இந்தியா முதல் 2 ஆட்டங்களில் தாய்லாந்தை 4-1, இங்கிலாந்தை 5-0 என வென்று காலிறுதியை உறுதி செய்தது. சி பிரிவில் இந்தோனேசியாவும் காலிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், கடைசி லீக் ஆட்டங்களில் இந்தியா – இந்தோனேசியா, தாய்லாந்து – இங்கிலாந்து இன்று மோதுகின்றன.

The post உபெர் கோப்பை பேட்மின்டன்: கால் இறுதியில் இந்தியா appeared first on Dinakaran.

Tags : Uber Cup Badminton ,India ,Chengdu ,Uber Cup Women's Team Badminton Tournament ,Chengdu, China ,Canada ,Singapore ,Dinakaran ,
× RELATED பழங்குடியினரின் வாழ்க்கையை வரையறுக்கும் தீபாவளி!