×

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

மும்பை: டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 2 முதல் 29-ம் தேதி வரை மேற்கிந்திய தீவுகள், அமெரிக்காவில் நடைபெறுகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் இடம்பெற்றுள்ளனர். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுல் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ அறிவித்த இந்திய அணி;

ரோகித் ஷர்மா (C), விராட் கோலி, யஜஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (VC), ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், யுஸ்வேந்த்ரா சாஹல், அர்ஷ்தீப் சிங்,ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மாற்று வீரர்களாக கில், ரிங்கு சிங்,கலீல் அகமது, அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்

 

The post டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : T20 World Cup Series ,Mumbai ,Indian ,T20 World Cup ,West Indies, USA ,Rohit Sharma ,Jaiswal ,Virat Kohli ,Dinakaran ,
× RELATED ஹாட்ரிக் வெற்றி யாருக்கு? இந்தியா –...