×

கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு!: சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும்..வியாபாரிகள் வேதனை..!!

நீலகிரி: இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொடைக்கானலில் இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்த பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இ-பாஸ் நடைமுறை வந்தால் மீண்டும் கொரோனா காலத்துக்கு செல்லக்கூடிய நிலை ஏற்படும் என வேதனை தெரிவிக்கின்றனர். இ-பாஸ் நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கொடைக்கானல் மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கொடைக்கானலுக்கு வர ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் இ-பாஸ் முறையால் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-பாஸ் முறையால் வருவாய் இழப்பு ஏற்படும் – வியாபாரிகள் வேதனை

கோடைகாலத்தை ஒட்டி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் கொடைக்கானல் வருகின்றனர். கொடைக்கானலில் சுற்றுலா தொழிலை நம்பி உள்ளூர்வாசிகள் பலர் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்றுவழி சாலைகளை அறிமுகப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு!: சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும்..வியாபாரிகள் வேதனை..!! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Nilgiris ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் சவ்சவ் விலை சரிந்தது: விவசாயிகள் கவலை