- நடமி
- விருத்தாச்சலம்
- கோவிந்தகிருஷ்ணன்
- ரமேஷ்
- பெலந்தரை கிராமம்
- கருவேப்பிலங்குறிச்சி
- ஜகமுத்து மாரியம்மன் கோவில்
- நடாமா
விருத்தாசலம், ஏப். 30: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள பெலாந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தகிருஷ்ணன் மகன் ரமேஷ்(48). இவர் அப்பகுதியில் கோயில் திருவிழாவின் நாட்டாமையாக இருந்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஜெகமுத்து மாரியம்மன் கோயிலில் கடந்த 23ம் தேதி அன்று சித்திரை திருவிழா காப்பு கட்டி தினம்தோறும் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. கடந்த 28ம் தேதி அன்று சாமி வீதி உலா சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த விஜய பிரபாகரன், ராவணன், முருகையன் ஆகிய மூன்று பேர் குடிபோதையில் சாமி ஊர்வலத்தை வழிமறித்து எங்களைக் கேட்காமல் சாமியை தூக்கக்கூடாது என கேட்டு தகராறு செய்துள்ளனர். இதனை தட்டிக் கேட்ட ரமேஷ் மற்றும் அவரது நண்பர் சந்தோஷ்குமார் ஆகிய இருவரையும் திட்டி, கல்லாலும் கட்டையாலும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ரமேஷ் கருவேப்பிலங்குறிச்சி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் விஜயபிரபாகரன், ராவணன், முருகையன் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிந்து விஜயபிரபாகரன்(25), ராவணன்(44) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நாட்டாமையை தாக்கிய 2 பேர் கைது appeared first on Dinakaran.