×

திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்: மாவட்ட செயலாளர் பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் திருத்தணியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிடபக்தன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் வி.சி.ஆர்.குமரன், சி.ஜெயபாரதி, எம்.மிதுன் சக்ரவர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் ப.சிட்டிபாபு, கே.எம்.சுப்பிரமணியம், ராஜேஷ்வரி ரவீந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்காக பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், மாநில இளைஞர் அணி செயலாளர், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் மற்றும் தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகள் அனைவருக்கும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

இதில் மாநில நிர்வாகிகள் ஆர்.டி.இ.ஆதிசேசன், ஒ.ஏ.நாகலிங்கம், குருதாஸ், தொகுதி பார்வையாளர்கள் வடசென்னை ந.மனோகரன், ராஜாகுப்புசாமி, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கூளுர் எம்.ராஜேந்திரன், எஸ்.மகாலிங்கம், சி.சு.ரவிச்சந்திரன், கே.அரிகிருஷ்ணன், மோ.ரமேஷ், சி.ஜெ.சீனிவாசன், சி.என்.சண்முகம், பெ.பழனி, ஜி.ரவீந்திரா, எம்.ஜெ.ஜோதிக்குமார், டி.ஆர்.கே.பாபு மற்றும் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவள்ளூர் நாடாளுமன்ற (தனி) தொகுதி, அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களின் வெற்றிக்காக பிரசாரம் மேற்கொண்ட திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலினுக்கும், மாநில இளைஞரணி செயலாளர், விளையாட்டு மேம்பாடு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தும், வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்திட்ட திமுக தோழர்களுக்கும் நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்: மாவட்ட செயலாளர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,West District DMK ,Thiruvallur West District DMK Union ,City and Barur Secretaries ,Team ,District DMK Office ,Tiruthani ,District ,Council ,President ,K. Dravidapakthan ,Thiruvallur West District DMK ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் கலெக்டர் தலைமையில் சட்டம், ஒழுங்கு ஆலோசனை கூட்டம்