×
Saravana Stores

மும்பை – லக்னோ இன்று பலப்பரீட்சை

லக்னோ: ஐபிஎல் டி20 தொடரின் 48வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. நடப்புத் தொடரில் இரு அணிகளும் தலா 9 ஆட்டங்களில் விளையாடி இருந்தாலும், இன்றுதான் முதல் முறையாக மோத இருக்கின்றன. லக்னோ விளையாடிய 9 ஆட்டங்களில் பஞ்சாப், பெங்களூரு, குஜராத், சென்னை (2 முறை) அணிகளை வீழ்த்தி 5 வெற்றிகளை பெற்றுள்ளது. ராஜஸ்தான் (2 முறை), டெல்லி, கொல்கத்தா அணிகளுக்கு எதிராக விளையாடிய 4 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியது.

ராகுல் தலைமையிலான லக்னோ அறிமுகமான முதல் 2 தொடர்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த 3வது தொடரிலும் லக்னோவுக்கு அந்த வாய்ப்பு உள்ளது. டி காக், படிக்கல், பூரன், ஹூடா, ஸ்டாய்னிஸ், க்ருணால், ஹென்றி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தால் மும்பை அணிக்கு சரியான சவால் காத்திருக்கிறது. அதே சமயம் 5 முறை சாம்பியனான மும்பை அணி புதிய கேப்டன் ஹர்திக் தலைமையில் தொடர் வெற்றிகளைக் குவிக்க முடியாமல் 9வது இடத்தில் பின்தங்கியுள்ளது. அந்த அணி 9 ஆட்டங்களில் டெல்லி, பெங்களூரு, பஞ்சாப் அணிகளை மட்டும் வீழ்த்திய நிலையில்… குஜராத், ஐதராபாத், ராஜஸ்தான் (2 முறை), சென்னை, டெல்லி அணிகளிடம் பரிதாபமாகத் தோற்றது.

ஹாட்ரிக் தோல்வியுடன் தொடரை தொடங்கிய மும்பை அணி, பின்னர் சுதாரித்து 3 வெற்றிகளைப் பதிவு செய்தாலும்… இன்றைய ஆட்டத்தில் தோற்றால் மீண்டும் ஹாட்ரிக் தோல்வி என்ற நெருக்கடியில் உள்ளது. இஷான், ரோகித், சூரியகுமார், திலக் வர்மா, டிம் டேவிட் என அதிரடி வீரர்கள் ஒருங்கிணந்து விளையாடினால் அதிலிருந்து மீளலாம். பந்துவீச்சிலும் பும்ரா, நபி, கோட்ஸீ, ஹர்திக், சாவ்லா சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
கடந்த ஆண்டு நடந்த எலிமினேட்டர் சுற்றில் லக்னோவை வீழ்த்தி அதன் பைனல் கனவை மும்பை கலைத்தது. அதற்கு பதிலடி கொடுக்க, சொந்த மண் ஆதரவை லக்னோ பயன்படுத்தும்.

* இரு அணிகளும் மோதிய 4 ஆட்டங்களில் லக்னா 3, மும்பை 1 வெற்றி பெற்றுள்ளன.
* மும்பை வென்ற ஒரு ஆட்டம் கடந்த ஆண்டு நடந்த எலிமினேட்டர் சுற்று ஆட்டமாகும்.
* அதிகபட்சமாக லக்னோ 199 ரன், மும்பை 182 ரன் விளாசியுள்ளன. குறைந்தபட்சமாக மும்பை 132, லக்னோ 101 ரன்னில் சுருண்டுள்ளன.

The post மும்பை – லக்னோ இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Lucknow ,IPL T20 ,Lucknow Supergiants ,Mumbai Indians ,Dinakaran ,
× RELATED மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி...