×

டீசல் பயன்பாட்டிற்கு பதிலாக அரசு பேருந்துகளை காஸ் மூலம் இயக்க திட்டம்: முதற்கட்டமாக சென்னையில் அறிமுகம்

தாம்பரம்: தமிழக போக்குவரத்து துறையை பொறுத்தவரை சென்னை, விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை உள்ளிட்ட 8 போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழகம் முழுவதும் தினசரி 9452 பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளுக்கான டீசல் செலவினம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே, டீசல் பயன்பாட்டிற்கு பதிலாக அரசு பேருந்துகளை மின்சார பேருந்துகளாகவோ அல்லது இயற்கை எரிவாயு பயன்படுத்தி இயக்கும் பேருந்துகளாகவோ மாற்ற போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டு அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வந்தன. குறிப்பாக, டீசலுக்கு பதிலாக இயற்கை வாயுவை (காஸ்) பயன்படுத்தி இயக்கினால் மைலேஜ் கூடுதலாக கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக நடத்தப்பட்ட ஆய்வின்படி வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளை இயற்கை எரிவாயுவிற்கு மாற்ற போக்குவரத்து கழகங்கள் மூலம் முடிவு செய்யப்பட்டன.

அதன் அடிப்படையில் சென்னை மற்றும் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் ஒரு இயற்கை எரிவாயு பேருந்துகளை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இது நல்ல வரவேற்பை பெற்றால் தொடர்ந்து அனைத்து பேருந்துகளை இயற்கை எரிவாயு பயன்பாட்டிற்கு மாற்ற திட்டமும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தில் டீசலுக்கு மாற்றாக அரசு பேருந்துகளை இயக்க பல்வேறு ஆலோசனைகளை செய்து வந்தோம். அதன்படி, மைலேஜ் அதிகரிக்கவும், காற்று மாசடைவதை தடுக்கவும் இயற்கை எரிவாயு மூலம் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம். இதனை செயல்படுத்த பரிசோதனை முறையில் பேருந்துகளை இயக்க அரசின் ஒப்புதலை கேட்டு இருக்கிறோம். அதன்படி அனுமதி கிடைத்தவுடன் உடனடியாக இயற்கை எரிவாயு கொண்டு பேருந்துகளை இயக்குவோம். இவ்வாறு தெரிவித்தனர்.

The post டீசல் பயன்பாட்டிற்கு பதிலாக அரசு பேருந்துகளை காஸ் மூலம் இயக்க திட்டம்: முதற்கட்டமாக சென்னையில் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tambaram ,Tamil ,Nadu ,transport department ,Villupuram ,Kumbakonam ,Salem ,Coimbatore ,Tamil Nadu ,
× RELATED சென்னை தாம்பரம் அருகே முன்விரோதம்...