×

போதையில் தகராறு செய்த கணவர் அடித்து கொலை? மனைவியிடம் போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை சைதாப்பேட்டை சுப்பிரமணியன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (48), கொத்தனாராக வேலை செய்து வந்த இவர், குடிபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதனால் தினமும் மனைவி ஜெயலட்சுமி மற்றும் மகன் யோகேஷ் (15), மகள் சுஜிதா (12) ஆகியோரிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை குடிபோதையில் ஆறுமுகம் தனது மனைவியிடம் தகராறு ெசய்துவிட்டு வெளியே சென்றுள்ளார். பிறகு மாலை 3 மணிக்கு மனைவி ஜெயலட்சுமி வீட்டிற்கு வந்து பார்த்த போது, கணவன் வீட்டில் உள்ள டிவி ஸ்டாண்டில் இடித்து கீழே விழுந்து விட்டதாகவும், அருகில் தூங்கிக் கொண்டிருந்த மகன் மற்றும் மகள் எழுந்து பார்த்த போது, ரத்தம் அதிகளவில் வெளியேறி இருந்ததால், ரத்தத்தை துணியால் துடைத்துவிட்டு, சம்பவம் குறித்து கணவரின் சகோதரர் ராமசாமியிடம் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

அதன்படி ராமசாமி வந்து பார்த்த போது, ஆறுமுகத்தின் தலை மற்றும் உடலில் ரத்த காயங்கள் இருந்ததை கண்டு 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து பார்த்த போது, ஆறுமுகம் ஏற்கனவே இறந்துவிட்டதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவம் குறித்து ராமசாமி சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் எனது சகோதரர் உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் இறந்து கிடந்தார். எனவே அவரது மனைவியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேடடை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து, உயிரிழந்த ஆறுமுகம் மனைவி ஜெயலட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போதையில் தகராறு செய்த கணவர் அடித்து கொலை? மனைவியிடம் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Arumugam ,Subramanian Koil Street, Saidappet, Chennai ,Jayalakshmi ,Yogesh ,Sujitha ,
× RELATED விமானத்தில் புகைபிடித்த...