×

குரங்கு தொல்லை அதிகரிப்பு

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் நான்கு மாடவீதிகள், சான்றோர் வீதி, கச்சேரி சந்து தெரு, திருவஞ்சாவடி தெரு, வணிகர் வீதி உள்ளிட்டவற்றில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. வீதிகளில் விளையாடும் சிறுவர்களை அவை துரத்தி துரத்தி கடிக்கின்றன. பெரியவர்களும் நாய்க்கடிக்கு தப்பவில்லை. ஆகவே, பேரூராட்சி நிர்வாகம் வீதிகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோன்று திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயில், பிரணவ மலைக்கோயில், பதிவு அலுவலகம், காவல் நிலையம், அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் ஏராளமான குரங்குகள் சுற்றுகின்றன. கூண்டு வைத்து பிடித்து அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குரங்கு தொல்லை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruporur ,Madaveethi ,Chandor Road ,Kacheri Sandu Street ,Thiruvanjavadi Street ,Merchant Road ,
× RELATED தனியார் பள்ளியில் திடீர் தீ விபத்து: திருப்போரூர் அருகே பரபரப்பு