×

2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை

ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் அருகே 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பிச்சாநத்தம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(40). இவருக்கு, பவித்ரா(30) என்ற மனைவியும் ரித்திக்(9), ரித்திகாஸ்ரீ (7) என்ற குழந்தைகளும் இருந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக சென்னை மயிலாப்பூரில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள துணிக்கடையில் கேஷியராக வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் சொந்த ஊரியில் விவசாயம் செய்துகொள்ள முடிவு செய்த சுரேஷ், கடந்த 12ம் தேதி சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கே வந்துள்ளார்.

பின்னர், 10 நாட்களுக்கு முன்பு வேலூரில் உள்ள தனியார் ஓட்டலில் கேஷியராக வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை 9 மணியளவில் பவித்ரா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றுவருதாக கணவனிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டிற்கு வரவில்லை. அப்போது, கிராமத்தை சேர்ந்த சிலர் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வந்து உனது குழந்தை கிணற்றில் சடலமாக கிடக்கிறது என்று கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் கிணற்றில் வந்து பார்த்தபோது பெண் குழந்தை சடலமாக கிடப்பது தெரிய வந்தது.

ஆனால், மனைவி மற்றும் மகன் இல்லை. இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றில் சடலமாக கிடந்த குழந்தையை மீட்டனர். பிறகு, கிணற்றில் மூழ்கி கிடந்த தாய், மகணை மீட்டனர். பின்னர், 3 உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Odugathur ,Suresh ,Picchanantham ,Odugathur, Vellore district ,Pavitra ,Rithik ,Rithikashree ,
× RELATED செல்போனுக்கு சார்ஜ் போடும் போது...