சென்னை: பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை பதிவிட்டதாக எச்.ராஜா மீது வழக்கு பதியப்பட்டது. எச்.ராஜா மீது பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல், பொது அமைதியை சீர்குலைத்தல், கலவரத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயசந்திரன், இந்த பதிவை பதிவிட்டது நீங்களா என ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தது தாம் தான் என்று எச்.ராஜா தரப்பில் பதிலளிக்கபட்டது. எச்.ராஜா பதிலை தொடர்ந்து வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, விசாரணையை சந்திக்க அறிவுறுத்தி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The post ஆபாச கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு..!! appeared first on Dinakaran.