- திமுகா
- தலைமை தேர்தல் அதிகாரி
- சத்யபிரத சகு
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- M. B. N. R.
- நீலகிரி
- தின மலர்
சென்னை: வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சில அறைகளில் சிசிடிவி செயல்படாதது தொடர்பாக திமுக மனு அளித்துள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ புகார் மனு அளித்தார். நீலகிரியில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி செயலிழந்தது குறித்து புகார் அளிக்கப்பட்டது. பின்னர் திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், நீலகிரி, ஈரோட்டில் சிசிடிவி கேமராக்கள் செயல்படாதது குறித்து புகாரளிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவியில் பிரச்சினை ஏற்பட்டது. தமிழகத்தில் உள்ள 40 ஸ்ட்ராங் ரூமிற்கும் வேறு எங்கும் இதுபோல் பிரச்சினை நிகழக்கூடாது என்பதற்காக புகார் மனு அளித்துள்ளோம். வாக்கு இந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாக்கு இந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் டிரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் என மனு அளித்துள்ளோம். சிசிடிவி காட்சிகளை முகவர்கள் பார்க்க விரும்பினால் காட்ட வேண்டும். வாக்காளர் பட்டியலை உறுதி செய்து கொள்வது அரசியல் கட்சிகளின் கடமை என தெரிவித்தார். திமுக சார்பில் அளித்த மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளதாகவும் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களிடம் கூறினார்.
The post வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கோளாறு: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் திமுக புகார் மனு..!! appeared first on Dinakaran.