×

வடசென்னை தொகுதி வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் விளக்கம்

சென்னை : சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து, வடசென்னை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளனர். வடசென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையமான ராணி மேரி கல்லூரியில் ஆய்வு செய்த அவர்கள்,”தினமும் காவல் அதிகாரிகள் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைகளை சிசிடிவி மூலம் ஆய்வு செய்து வருகின்றனர். தேர்தல் நடத்தும் அதிகாரி தினந்தோறும் வாக்கு எண்ணும் மையத்தில் வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து வருகிறார்,”இவ்வாறு தெரிவித்தனர்.

The post வடசென்னை தொகுதி வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : North ,Chennai ,Constituency Vote Counting Center ,Police Commissioner ,Sandeep Rai Rathore ,Municipal ,Corporation ,Commissioner ,Radhakrishnan ,North Chennai Lok ,Sabha Constituency Vote Counting Centre ,North Chennai ,Constituency… ,Vote Counting Center ,
× RELATED வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!!