×

பாஜகவில் இணைந்தவர்கள் மீதான அமலாக்கத்துறை வழக்குகள் ரத்து செய்யப்படவில்லை : பிரதமர் மோடி

டெல்லி :பாஜகவில் இணைந்தவர்கள் மீதான அமலாக்கத்துறை வழக்குகள் ரத்து செய்யப்படவில்லை என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், அமலாக்கத்துறை, சிபிஐ-யை வைத்து பாஜக ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பதாக கூறப்படுவதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் ஆட்சியிலும் அமலாக்கத்துறை, சிபிஐ விசாரணை அமைப்புகள் இருந்தன என்றும் அமலாக்கத்துறை, சிபிஐ-யை வைத்து ஆட்சியைப் பிடிக்க முடியும் என்றால் காங்கிரஸ் தோற்றது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post பாஜகவில் இணைந்தவர்கள் மீதான அமலாக்கத்துறை வழக்குகள் ரத்து செய்யப்படவில்லை : பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Enforcement Directorate ,BJP ,PM Modi ,Delhi ,Modi ,CBI ,Congress ,
× RELATED விழுப்புரம் வட்டாச்சியர் சுந்தரராஜன்...