×

முத்துப்பேட்டையில் தொடக்கப்பள்ளி சார்பில் ஐம்பெரும் விழா

 

முத்துப்பேட்டை, ஏப்.29: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி சார்பில் இயக்க ஆண்டுவிழா, பணி ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு, நூல் வெளியிட்டு விழா, தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு என ஐம்பெரும் விழா நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், பாரதிமோகன், சிங்கராவேலன், சசிகலா ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வட்டார செயலாளர் செல்வசிதம்பரம் வரவேற்றுப் பேசினார். துணைச் செயலாளர் செந்தில்குமார் அறிக்கை வசித்தார். பணி ஓய்வுபெறும் தலைமையாசிரியர்கள் முருகேசன், வேதமூர்த்தி, வீரசேகரன், இந்திராகாந்தி, ஆசிரியர்கள் சியாமளா, குணசேகரன் ஆகியோருக்கும், அதேபோல் இலக்கிய விருது பெற்ற மகேஸ்வரன், நூலுக்கான விருது பெற்ற ராசகுமரன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட ஈவேரா, மாவட்ட பொருளாளர் சுபாஷ், ஜீலியஸ் ஆகியோர் வாழ்த்திப்பேசினார்.அதனைத்தொடர்ந்து ஆசிரியர் தஞ்சாவூர் தரணியனின் நிலவை கொத்தும் பறவை கவிதை தொகுப்பு வெளியிடப்பட்டது. இதில் வட்டார கல்வி அலுவலர் ராமசாமி, ஆசிரியர் பயிற்றுனர் தரன், கோட்டூர் வட்டார தலைவர் தங்கபாபு, கோட்டூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், ஆசிரியர் ஆரோக்கிய அந்தோணி ராஜா உட்பட மாநில, மாவட்ட, வட்டார, நகர பொறுப்பாளர்கள் உள்பட நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வட்டார பொருளாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

 

The post முத்துப்பேட்டையில் தொடக்கப்பள்ளி சார்பில் ஐம்பெரும் விழா appeared first on Dinakaran.

Tags : Muthupettai ,Muthuppet ,Thiruvarur District ,Tamil Nadu Primary School ,
× RELATED முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையில் கண்களுக்கு விருந்தளித்த கொண்றை பூக்கள்