- முகன்னாமலைபட்டி
- விராலிமலை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தவ்ஹீத்
- ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம்
- முகண்ணாமலைப்பட்டி
- அன்னவாசல்
விராலிமலை, ஏப்.29: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல் கிளையின் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நேற்று நடைபெற்றது
தமிழ்நாடு முழுவதும் மழை பொழிவு இல்லாமல் வறண்ட நிலை காணப்பட்டு வருகிறது. இதனால் விவசாயம் பாதிப்பு அடைவதோடு நீர் நிலைகளில் தண்ணீர் வற்றி வறண்ட நிலை காணப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ் துளை கிணறுகளிலும் நீர் மட்டம் குறைந்து தண்ணீர் வற்றும் சூழ்நிலைக்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் மாறி உள்ளது.
மேலும், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இக்காலகட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) காட்டித் தந்த அடிப்படையில் மழை இல்லாத காலங்களில் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபடுவார்கள்.அந்த வகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பில் இரண்டு இடங்களில் இஸ்லாமியர்களின் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இதில், மாவட்ட பொருளாளர் ரபீக் ராஜா ,கிளைத் தலைவர் ஜக்கரியா, செயலாளர் நவ் ஃபுல், பொருளாளர் மைதீன், பஷீர் அலி இம்ரான், மாவட்ட தொண்டரணி காஜா மைதீன் கிளைத் தலைவர் நசீர்,செயலாளர் அமானுல்லா, பொருளாளர் ஜாபர் அலி, உமர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post முக்கண்ணாமலைப்பட்டியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை appeared first on Dinakaran.