×

கொள்ளிடம் அருகே கடைவீதியில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது

 

கொள்ளிடம், ஏப்.29: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மகேந்திர பள்ளி கிராமம் நடுத்தெருவை சேர்ந்த வீரப்பன் மகன் கார்த்தி(35). இவர் நேற்று புதுப்பட்டினம் கடை வீதியில் நின்று கொண்டு பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தாகத வார்த்தைகளால் பேசிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி மற்றும் போலீசார் சிவராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களுக்கு இடையூறாக செயல்பட்ட கார்த்தி என்பவரை கைது செய்தனர்.

The post கொள்ளிடம் அருகே கடைவீதியில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Kollidam ,Veerappan ,Karthi ,Mahendra Palli village ,Kollidam, Mayiladuthurai district ,Pudupatnam shopping street ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் 500 ஏக்கரில்...