×

நீலகிரியில் போக்குகாட்டும் கோடை மழை

 

கூடலூர்,ஏப்.29: கோடை காலத்தில் அதிக அளவில் வெயில் வாட்டி வருவதாலும்,இந்த வருடம் மார்ச், ஏப்ரல் மாதத்தில் பெய்ய வேண்டிய கோடை மழை பொய்த்ததாலும் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. நீராதாரங்களில் ஏற்பட்டுள்ள வறட்சியால் அணைகளுக்கு நீர் வரத்து வெகுவாக குறைந்து காணப்படுகிறது.பைக்காரா அணையில் நீர் இருப்பு குறைந்துள்ளதால் அணையில் இருந்து வெளியேறும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் பைக்காரா அணைப் பகுதியிலிருந்து வரும் ஆற்றில் தண்ணீர் குறைந்து நீர்வீழ்ச்சி பகுதியில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. பைக்காரா படகு இல்லத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பராமரிப்பு பணிக்காக சாலை மூடப்பட்டுள்ளதால், நீர்வீழ்ச்சியை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

The post நீலகிரியில் போக்குகாட்டும் கோடை மழை appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Kudalur ,Dinakaran ,
× RELATED கூடலூர் மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு