×
Saravana Stores

ஊராட்சி செயலாளர், மனைவி மீது சொத்து குவிப்பு வழக்கு: வேலூர் விஜிலென்ஸ் போலீசார் நடவடிக்கை

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் பேரூராட்சிக்குப்பட்ட மேட்டுப்பாளையம் பழைய காலனி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரபு(49). இவர் பொன்னை அடுத்த பாலகுப்பம் கிராம ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். காட்பாடி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் பிரபு ஊராட்சி செயலாளராக பணியாற்றியபோது கடந்த 2011-17ம் ஆண்டில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, சொத்துக்களை வாங்கியுள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதையடுத்து வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கடந்த 25ம் தேதி பிரபு வீட்டில் திடீர் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதைதொடர்ந்து ஆவணங்களை ஆய்வு செய்ததில் பிரபு மற்றும் அவரது மனைவி பெயரில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.20 லட்சத்து 43 ஆயிரம் சொத்து குவித்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம ஊராட்சி செயலாளர் பிரபு, அவரது மனைவி கலையரசி ஆகியோர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஊராட்சி செயலாளர், மனைவி மீது சொத்து குவிப்பு வழக்கு: வேலூர் விஜிலென்ஸ் போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Vellore ,Prabhu ,Mettupalayam Old Colony ,Gadpadi Taluk, Tiruvalam Municipality, Vellore District ,Balakuppam ,Ponnai ,Gadpadi ,Panchayat ,Dinakaran ,
× RELATED காட்பாடி அருகே பயணிகள் ரயிலின்...