×

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இகா முன்னேற்றம்

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) தகுதி பெற்றார். 3வது சுற்றில் ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியாவுடன் (34 வயது, 30வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்வியாடெக் (22 வயது) 6-1, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

இப்போட்டி 1 மணி, 18 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. முன்னணி வீராங்கனைகள் மரியா சாக்கரி (கிரீஸ்), விக்டோரியா அசரெங்கா (பெலாரஸ்) ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

The post மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இகா முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : Madrid Open Tennis ,Iga ,Madrid ,Ika Swiadek ,Poland ,Round ,Madrid Open Tennis Series ,Spain ,Romania ,Sorana Cirstia ,Dinakaran ,
× RELATED பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இகா மீண்டும் சாம்பியன் ஹாட்ரிக் சாதனை