* ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 2வது சுற்று அரையிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மோகன் பகான் எஸ்ஜி – ஒடிஷா எப்சி அணிகள் மோதுகின்றன. புவனேஸ்வரில் நடந்த முதல் சுற்றில் ஒடிஷா 2-1 என்ற கோல் கணக்கில் வென்று முன்னிலை வகிக்கிறது. இதனால் மோகன் பகான் நெருக்கடியுடன் களமிறங்குகிறது. நாளை நடைபெறும் 2வது ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்சி – எப்சி கோவா அணிகள் விளையாட உள்ளன.
* இந்திய பெண்கள் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதல் ஆட்டம் இன்று நடக்கிறது. எஞ்சிய 4 ஆட்டங்கள் ஏப்.30, மே 2, 6, 9 தேதிகளில் நடைபெற உள்ளன. இந்த 5 ஆட்டங்களும் சிலெட்டில் உள்ள சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெறும். இப்போட்டிக்காக வங்கதேசம் சென்றுள்ள ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வீராங்கனைகள் நேற்று தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
* சீனாவின் செங்டு நகரில் தாமஸ் & உபெர் கோப்பை குழு பேட்மின்டன் போட்டி நேற்று தொடங்கியது. உபெர் கோப்பைக்கான மகளிர் பிரிவில் இந்தியா – கனடா அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அஸ்மிதா சாலியா 26-24, 24-22 என நேர் செட்களில் கனடாவின் லி மிச்செலியை வீழ்த்தினார். இஸ்ரானி பரூவா, அன்மோல் கார்ப் ஆகியோரும் வெற்றியை வசப்படுத்தினர். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிம்ரன் சிங்கி – ரித்திகா தாகர் ஆகியோர் 19-21, 15-21 என நேர் செட்களில் கனடாவின் ஜாக்கி டென்ட் – கிரிஸ்டல் லாய் இணையிடம் தோற்றனர். எனினும், பிரியா கன்ஜெங்பம் – ஸ்ருதி மிஸ்ரா இணை 21-12, 21-10 என நேர் நேர் செட்களில் கனடாவின் கேத்ரின் சோய் – ஜெஸ்லின் சோவ் இணையை எளிதில் வீழ்த்த, இந்தியா 4-1 என்ற கணக்கில் அபாரமாக வென்றது.
The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.