×
Saravana Stores

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி வீராங்கனை நேத்ரா குமணனுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து

சென்னை: பாரிஸ் ஒலிம்பிக் பாய்மர படகோட்டுதல் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழ்நாடு வீராங்கனை நேத்ரா குமணனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ELITE திட்ட வீராங்கனையான தங்கை நேத்ரா குமணன், #ParisOlympics2024-ல் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று, 2வது முறையாக இந்தியா சார்பில் ஒலிம்பிக் படகுப்போட்டியில் களம் காணவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் பாராட்டுகள். #TokyoOlympics-ல் பங்கேற்றதன் மூலம், இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் படகுப்போட்டிக்கு தேர்வான முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்ற தங்கை நேத்ரா, எதிர்வரும் ஒலிம்பிக் 2024-ல் வெற்றி வாகை சூடிட என் அன்பும், வாழ்த்தும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

ஜி.கே.வாசன்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘பிரான்ஸ் ஹையரெஸில் நடந்த ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியில், தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை நேத்ரா குமணன் பாய்மரப் படகுப் போட்டி இறுதிச்சுற்றில் களம் இறங்கி 67 புள்ளிகள் பெற்று முதல் 5 இடங்களுக்குள் வந்து, ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்தார். இதனால் தமிழகத்தின் விளையாட்டுத் திறமை உலக அளவில் போற்றப்படும். சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமணனுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

The post பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி வீராங்கனை நேத்ரா குமணனுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi ,Netra Kumanan ,Paris Olympics ,Chennai ,Udayanidhi Stalin ,Tamil ,Nadu ,Nethra Kumanan ,Paris Olympic ,Sports Minister ,Udhayanidhi Stalin ,Tamil Nadu Sports Development Authority ,
× RELATED நீண்ட கால நண்பர் விஜய்யின் புதிய...