×

நீண்ட கால நண்பர் விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்: உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னை: ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், விஜய் எனது நீண்ட கால நண்பர். அவரது புதிய முயற்சிக்கு எனது வாழ்த்துகள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நேற்று அளித்த பேட்டி:

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். தமிழ்நாட்டில் பல கட்சிகள் உதயமாகியுள்ளன. ஆனால் மக்கள் ஆதரவைப் பெறுவதுதான் முக்கியம். பல கட்சிகள் காணாமல் போயும் உள்ளன. ஒரு தயாரிப்பாளராக நான் முதலில் தயாரித்ததே விஜய் படம் தான். அந்த வகையில் நீண்ட கால நண்பரான விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.

The post நீண்ட கால நண்பர் விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்: உதயநிதி ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Vijay ,Udayanidhi Stalin ,CHENNAI ,Deputy Chief Minister ,DMK Youth Team ,Udayanidhi ,
× RELATED கல்லூரியில் வகுப்பு முடிந்து வந்த...