சென்னை: தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி கடந்த 19-ம் தேதி ஈரோட்டில் புதிய உச்சமாக 109 டிகிரி வெயில் கொளுத்தியது. நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
இந்தநிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று வெப்பஅலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
The post இரக்கம் காட்டாத வெயில்; தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை appeared first on Dinakaran.