×

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம்: 3 ஆண்டுகளாக நிதி தராமல் ஒன்றிய அரசு இழுத்தடிப்பு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு 3 ஆண்டுகளாக ஒன்றிய அரசு ஒப்புதல் தராதது ஆர்.டி.ஐ. மூலம் அம்பலமானது. 2021 ஆக.17-ம் தேதி பொது முதலீட்டு வாரியத்தால் பங்கு பகிர்வு மாதிரியின் கீழ் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பொது முதலீட்டு வாரியம் ஒப்புதல் அளித்து 3 ஆண்டுகளாகியும் நிதி ஒதுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காதது அம்பலமாகியுள்ளது. திட்டத்துக்காக ஒப்புதலை வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக பிரதமரிடம் வலியுறுத்தி வந்தது.

The post சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம்: 3 ஆண்டுகளாக நிதி தராமல் ஒன்றிய அரசு இழுத்தடிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,EU ,Union Government ,Public Investment Board ,Dinakaran ,
× RELATED பணிக்கு தாமதமாக வருவோர் மீது கடுமையான...