×

பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்: சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை ஒட்டி முதல்வர் பதிவு

சென்னை: பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்.பிட்டி தியாகராயரின் 173-வது பிறந்த நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலை தளத்தில் பதிவிட்டுள்ளார். சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி என்று முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர். சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

The post பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்: சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை ஒட்டி முதல்வர் பதிவு appeared first on Dinakaran.

Tags : Theer ,Chief Minister ,Sir ,Pitti Thiagaraya ,Chennai ,M.K.Stalin ,M.K.Stalin X ,Pitti Thiagarayar ,
× RELATED சொல்லிட்டாங்க…