×

ஜங்ஷன் நுழைவாயிலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

திருச்சி, ஏப். 27: திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் பழைய நுழைவாயில் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து கிடந்ததுள்ளார். இது குறித்து அப்பகுதி ஆட்டோ டிரைவர் ராஜரத்தினம் என்பவர் அளித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

50 வயது மதிக்கதக்கவர், மூக்கின் வலது புறம் மச்சம், இடுப்பின் இடது புறம் புள்ளி மச்சம், வெள்ளை ஊதா முழு கை கட்டம் போட்ட சட்டை,கருப்பு கலர் பேணட் அணிந்துள்ளார். மேலும் இவரை பற்றி தகவல் ஏதேனும் தெரிந்தால் கண்டோன்மெண்ட் காவல் நிலைய எண்ணிற்கு 0431 2460692, 9498100626 தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The post ஜங்ஷன் நுழைவாயிலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichy Junction railway station ,Cantonment ,Rajaratnam ,
× RELATED பல்லாவரத்தில் ராணுவத்தின்...