×

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு பதிவு செய்யாத 4 லட்சம் வாக்காளர்கள்: வீணான 100 சதவீத விழிப்புணர்வு

காஞ்சிபுரம், ஏப்.27: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 4 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், தமிழகத்தில் கடந்த 19ம்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 8,53,456 ஆண் வாக்காளர்களும், 8,95,107 பெண் வாக்காளர்களும், 303 திருநங்கைகளும் என மொத்தம் 17 லட்சத்து 48 ஆயிரத்து 866 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் 6,31,966 ஆண் வாக்காளர்களும், 6,21,533 பெண் வாக்காளர்களும், 56 திருநங்கைகள் என மொத்தம் 12 லட்சத்து 53 ஆயிரத்து 582 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

மீதம் 4 லட்சத்து 95 ஆயிரத்து 884 பேர் வாக்களிக்கவில்லை. கடந்த முறை 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் செல்வம் வெற்றிபெற்றார். ஆனால், இந்த முறை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று திமுக பிரசாரத்தில் முக்கிய கருத்தாக வைக்கப்பட்டது. ஆனால், இந்த முறை 4 லட்சத்து 95 ஆயிரம் பேர் வாக்களிக்க வரவில்லை, இதற்கு யார் காரணம் என்பதும் புரியாத புதிராக உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மாவட்ட தேர்தல் அலுவலர் பொதுமக்களிடையே 100 சதவீதம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டது. ஆனால், அது வாக்காளர்களிடம் சரியாக சென்று சேரவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம், குன்றத்தூர் பேருந்து நிலையம், ஐயப்பதாங்கல் பேருந்து நிலையம், படப்பை பேருந்து நிலையம், சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், பல்கலைக்கழகம், கல்லூரிகளை சேர்ந்த மாணவ – மாணவிகளுடன் இணைந்து, இளம் வாக்காளர்களை கவரும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், உறுதிமொழி ஏற்பும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
விளையாட்டு வீரர்களை கவரும் வகையில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், வாக்காளர்களை 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, விளம்பர பதாகைகளும், பேனர்களும், தேர்தல் திருவிழா பேனர்களும் போன்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஆலந்தூர், பெரும்புதூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் மட்டும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட எல்லைக்குட்பட்ட வரையறைக்குள் நடைபெற்றன.

நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 தொகுதி என்ற வரையறைக்குள் நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மக்களை கவரும் வகையிலும் இல்லை, போதுமானதாக மக்களை ஈர்க்கும் வகையிலும் இல்லை என கூறப்படுகிறது. ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்ற எண்ணம் வாக்காளர் மத்தியில் உருவாகும் வகையில் நடைபெறவில்லை என்ற கருத்தும் ஒருபக்கம் இருந்தாலும், மற்ற 4 தொகுதிகள் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வருவதால் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய 6 தொகுதிகளில் 100 சதவீதம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை முழுமையாக செய்ய முடியவில்லை என்பதும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கிறது.

மேலும் முதியவர்கள், வயதானவர்கள், வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க முடியாதவர்கள் என வாக்குகளை முழுமையாக மாவட்ட நிர்வாகத்தால் பெற முடியவில்லை. அவர்களுக்கு தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்கலாம் என்று தெரிவித்தாலும் ஒருசில இடங்களில் தபால் வாக்குகளை அவர்களிடம் பெற்றாலும், மொத்த வாக்குகளும் முழுமையாக பெறுவதில் அதிகாரிகள் பணியாற்ற முடியவில்லை. ஏன் எனில் காவல் துறையிலும் அரசு ஊழியர்களுமே முழுமையாக வாக்களித்தார்களா என்பது சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது. மூன்றாம் தர பாலினர்கள் 303 பேர் என்று இருந்தாலும், 56 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். அவருடைய வாக்கை கூட முழுமையாக பெற முடியாத சூழல் உள்ளது. பெரும்பாலும் இறந்தவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலும் இருப்பவர்கள், பெயர்கள் வாக்காளர் பட்டியல் இடம் பெறவில்லை என்பதும் தேர்தல் பிரிவின் தோல்வியை காட்டுகிறது.

மேலும், 18 வயதில் இருந்து 19 வயதுக்குரியவர்கள் இளம் வாக்காளர்கள் 30,019 அவர்களுடைய வாக்குகளை முழுமையாக பெறவில்லை காரணம் அவர்கள் வாக்களிக்க வேண்டுமா? பழைய அரசியலும் அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை தெரிந்து கொள்வதற்கும் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. அப்படி இருந்தாலும் நாம் எதற்கு வாக்களிக்க வேண்டும்? வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலையிலேயே பெரும்பாலும் இளைஞர்களை இருக்கிறார்கள் என்பதாக தெரிகிறது. ஆகவே, இளம் வாக்காளர்களை கவரும் வகையில் தேர்தல் பிரிவு பணியாற்ற வில்லை என்பதும், இளம் வாக்காளர்கள் குற்றம் சொல்லுகிறார்கள்.

ஒரு சிலருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் பலருக்கு இருப்பதாக தெரியவில்லை. மொத்தத்தில் யாருக்கும் (நோட்டா) வாக்களிக்க விருப்பம் இல்லை என்ற வாக்குகளை விட தற்போது வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க முன்வரவில்லை என்ற வாக்குகள் 4 லட்சத்திற்கும் மேல் இருப்பது மிகுந்த வருத்தத்தையும், கவலையும் அடைய வைத்துள்ளது. ஆகவே, 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையமும், மாவட்ட தேர்தல் பிரிவும் பணியாற்றினாலும் வாக்காளர்களுக்கு 100 சதவீதமான வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதிலே அவர்கள் கவனம் செலுத்தவில்லை. 100 சதவீதம் வாக்காளர் அடையாள விழிப்புணர்வு ஏற்படுத்தி, 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று பணியாற்றிய அதிகாரிகள் தேர்தல் நிதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவழித்தால் மட்டும் போதும் என்ற நோக்கிலே அவர்கள் செயல்பட்டதும் ஒரு காரணம் என்று வாக்காளர்கள் குற்றச்சாட்டுகிறார்கள்.

n விளையாட்டு வீரர்களை கவரும் வகையில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், வாக்காளர்களை 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, விளம்பர பதாகைகளும், பேனர்களும், தேர்தல் திருவிழா பேனர்களும் வைத்து தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
n முதியவர்கள், வயதானவர்கள், வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க முடியாதவர்கள் என வாக்குகளை முழுமையாக மாவட்ட நிர்வாகத்தால் பெற முடியவில்லை. அவர்களுக்கு தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்கலாம் என்று தெரிவித்தாலும் ஒருசில இடங்களில் தபால் வாக்குகளை அவர்களிடம் பெற்றாலும், மொத்த வாக்குகளும் முழுமையாக பெறுவதில் அதிகாரிகள் பணியாற்ற முடியவில்லை. ஏன் எனில் காவல் துறையும் அரசு ஊழியர்களுமே முழுமையாக வாக்களித்தார்களா என்பது சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது.

The post காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு பதிவு செய்யாத 4 லட்சம் வாக்காளர்கள்: வீணான 100 சதவீத விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram parliamentary ,Kanchipuram ,India ,Tamil Nadu ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி...