×

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் விறுவிறு வாக்குப்பதிவு: கலெக்டர், எம்பி, எம்எல்ஏ, மேயர் வாக்களித்தனர்

காஞ்சிபுரம், ஏப்.20: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில், வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் கலைச்செல்வி மோகன், எம்பி செல்வம், எம்எல்ஏ எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில், 6 சட்டமன்ற தொகுதியில் 1,932 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில், 372 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு பேடப்பட்டன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் எஸ்பி சண்முகம் தலைமையில் 9 ஏடிஎஸ்பிக்கள், 22 இன்ஸ்பெக்டர்கள், 170 சப் – இன்பெக்டர்கள், 670 போலீசார், 400 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், 350 ஓய்வுபெற்ற போலீசார் என மொத்தம் 1,621 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மாவட்டம் முழுவதும் வாக்குபதிவு மையத்தில் 6800 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 8,53,456 ஆண் வாக்காளர்களும், 8,95,107 பெண் வாக்களர்களும், 303 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 17,48,866 வாக்காளர்கள் உள்ளனர். அதன்படி, நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் காலனியில் உள்ள இன்பனட் ஜீசஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவு மையத்தில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திவாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் வாக்குசாவடி எண்:326ல் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் க.செல்வம், தனது மனைவி லஷ்மிகாவுடன் தங்களின் வாக்கினை பதிவு செய்தார்.

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், தேர்தல் வாக்குச்சாவடி மையத்தில் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், அவரது மனைவி கலைமகள், மகன்கள் ஆதித்யா, ஆதித்யன் ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், நாராயணர் குரு பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், பரங்கிமலை ஒன்றியம் பெரும்பாக்கம் பாரதிய வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து பொதுமக்களும் அந்தந்த வாக்குச்சாவடிக்கை வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை செலுத்தினர்.

The post காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் விறுவிறு வாக்குப்பதிவு: கலெக்டர், எம்பி, எம்எல்ஏ, மேயர் வாக்களித்தனர் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Parliamentary ,MLA ,Kanchipuram ,Collector ,Kalachelvi Mohan ,Selvam ,Ehilarasan ,Municipal Corporation ,Mayor ,Mahalakshmi Yuvaraj ,Kanchipuram Parliamentary Constituency ,Parliamentary Constituency ,Parliamentary ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...