×

பள்ளி மாணவன் கடத்தலா? போலீசார் விசாரணை

பொன்னை, ஏப்.27: மேல்பாடி அடுத்த இளையநல்லூரை சேர்ந்தவர் விநாயகம். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி உடல்நல பாதிப்பால் இறந்துவிட்டார். தாயார் இறந்த விரக்தியில் விநாயகத்தின் 2வது மகன் கோபிநாத்(15) பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகின்றது. விநாயகம் அதே பகுதியில் செங்கல் சூளை தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கோபிநாத், விநாயகம் அமைத்து வரும் செங்கல் சூளை பகுதியில் இருந்து காலை 10 மணிக்கு வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் நேற்று மாலை வரை வீட்டிற்கு வரவில்லை எனத்தெரிகிறது. கோபிநாத்தை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. யாராவது கடத்தி சென்றார்களா என்றும் தெரியவில்லை. இதுகுறித்து பொன்னை போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் மேல்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post பள்ளி மாணவன் கடத்தலா? போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Ponnai ,Vinayagam ,Melpadi ,Ilayanallur ,Vinayaka ,Gopinath ,Dinakaran ,
× RELATED சாமியாரை அடித்துக்கொன்று சடலம்...